சினிமா செய்திகள்

இலண்டனில் கோடம்பாக்கம் – தெருவெங்கும் தமிழ் முகங்கள்

இலண்டன் மாநகரில் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் முகங்கள் தென்படுகின்றன என்கிறார்கள். அதற்குக் காரணம், அங்கே ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் மலையாளப்படமொன்றின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ஒன்று தொடங்கியிருக்கிறது.

அந்தப்படத்தின், மொத்தப் படப்பிடிப்பும் இலண்டனில் நடக்கும் என்று சொன்னார்கள்.இப்போது அதன் படப்பிடிப்பு இலண்டனில் நடந்துகொண்டிருக்கிறதாம்.

அதற்கடுத்து, பாலாஜிமோகன் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், அமலாபால் மற்றும் துஷாராவிஜயன் ஆகியோரும் நடிக்கும் புதியபடத்தை டாக்டர் முரளிமனோகர் தயாரிக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பும் இலண்டனில் நடக்கிறதாம்.

சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடிப்பில் ‘ராம்’ என்ற படத்தை ஆரம்பித்தார் இயக்குநர் ஜீத்துஜோசப். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டி இருந்ததால், கொரோனா பரவல் காரணமாக அந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது. கேரளாவின் எர்ணாகுளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது.

அதற்கடுத்து அப்படக்குழு இலண்டன் சென்றிருக்கிறது.

இம்மூன்று படப்பிடிப்புகளும் அங்கே நடைபெறுகின்றன. இதனால் தமிழ் மற்றும் மலையாள மக்கள் கூட்டம் கூட்டமாக படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வருகிறார்களாம்.

இதனால் தெருவெங்கும் தமிழ்முகங்கள் தென்படுகின்றன என்கிறார்கள்.

Related Posts