விஜய்சேதுபதி சத்யராஜ் படம் ரீமேக்கா?
திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரும் இணைந்து பல முதலீட்டாளர்களை இணைத்துக் கொண்டு ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார்கள்.
அந்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ்.கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.
இந்தப்படத்தின் கதையை வெங்கட்சுபா எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படம் ஒரு தெலுங்குப்படத்தின் மொழிமாற்று என்றொரு செய்தி உலவுகிறது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த நாகேஸ்வர ராவ் நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற படமொன்றைத்தான் இக்காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் படமாக எடுக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.











