சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது

விவேகம் படத்தை அடுத்து அஜித்குமார், விசுவாசம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள்.

4-வது முறையாக, விசுவாசம் படத்தில் இணைகிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.

இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி ஐதராபாதில் தொடங்குவதாக இருந்தது.

இப்போது தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 16 முதல் வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

Related Posts