அஜித் ரசிகர்களின் அட்டகாசம்
தமிழ்த் திரையுலகில் எந்தப் பின்புலமும் இல்லாமல் நுழைந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கான ரசிகர் கூட்டம் ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகும் குறையாமல் தொடர்கிறது.
அஜித் நடிக்கும் புதிய படம் வெளியாகும் நேரங்களில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருவிழா நடப்பது போல சமூக வலைதளங்களை அதிர வைப்பார்கள். குறிப்பாக ட்விட்ட்ரில் அவர்கள் நிரம்பி வழிவார்கள்.
ஆனால் மார்ச் 10 ஆம் தேதியான இன்று ட்விட்ட்ரில் அஜித் டிரெண்டில் இருக்கிறார். உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி அஜித் பிறந்தநாள். அதை இன்றிலிருந்தே கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள் அஜித் ரசிகர்கள்.
50DAYS TO SAMRAT AJITH BDAY என்கிற ஹேஷ்டேக் உருவாக்கி அதை இந்திய அளவில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் படம் வெளியாகும்போதுதான் செயல்படவேண்டும் என்றில்லாமல் எல்லா நாட்களும் வேகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.











