வலிமை படம் குறித்து யுவன்ஷங்கர்ராஜா புதிய தகவல்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிகிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்தவொரு தகவலையும் படக்குழு தெரிவிக்கவில்லை. அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷ்ங்கர் ராஜா, அதில் வ்லிமை படம் குறித்த ஒரு செய்தியை வெளீயிட்டுள்ளார்.
வலிமை படத்தில் அஜீத்தின் அறிமுகப்பாடலை யுவன் முடித்துள்ளார். இது அதிரடியான, ஒரு துள்ளலிசைப் பாடலாக, ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும். ஒடிசாவில் திருவிழாக் காலங்களில் வாசிக்கும் ட்ரம்ஸ் இசைக் கலைஞர்கள் இந்தப் பாடலில் பங்கெடுத்துள்ளனர். ‘இது ஒரு சரியான மாஸ் பாட்டு’. விக்னேஷ் சிவன் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











