September 7, 2024
சினிமா செய்திகள்

ஆந்திராவில் திரைப்படத்துறை வேலைநிறுத்தம் – விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு நடப்பது எப்படி?

இப்போது நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் வாரிசு. இது விஜய்யின் 66 ஆவது படம். இப்படம் ஏப்ரல் 6 அன்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.

இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.

ஏப்ரல் 6 அன்று அந்தப் படம் பூசையுடன் ஆரம்பமானது.அன்றே படப்பிடிப்பும் தொடங்கியது.

இந்தப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கியவேடத்தில் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மேற்கொள்கிறார்.

இப்படம் 2023 பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

ஆந்திர திரைத்துறையினர் பல்வேறு சிக்கல்கள் காரணமாக வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் அங்கு படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளன.

அப்ப்டியிருக்கும்போது விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடக்கிறது?

இதுதொடர்பாக விசாரித்தால், இப்படத்துக்காக விஜய் கொடுத்திருக்கும் தேதிகளை விட்டால் அடுத்து அவர் தேதி வாங்குவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை எடுத்துச்சொல்லி ஆந்திர திரைப்படத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற்று விஜய் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்கிறார்கள்.

இவ்வளவு நெருக்கடிக்கு இடையே படப்பிடிப்பு நடப்பதால்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் எதற்காகவும் வெளியில் வராத விஜய், நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று சேர்ந்தார் என்று சொல்கிறார்கள்.

Related Posts