செய்திக் குறிப்புகள்

முகநூல் விபரீதம் சொல்லும் படம் – விவரங்கள்

இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது வாழ்க்கைப் பாதை எவ்வாறு மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கும் திரைப்படம் எங்க வீட்ல பார்ட்டி.

ஐந்து இளைஞர்கள், இரண்டு பெண்கள் முகநூல் மூலமாகப் பழக்கமாகி ஓரிடத்தில் சந்தித்து பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளை யார் கொலை செய்தது? கொலை செய்யக் காரணம் என்ன? என்பதைக் கண்டுபிடிக்கும் கதையே “எங்க வீட்ல பார்ட்டி.

அகிலா முதலாம் வகுப்பு, கணீனியும் கழனியும், ஆகிய படங்களை இயக்கிய கே.சுரேஷ் கண்ணா, கதை திரைக்கதை வசனம்
எழுதி இயக்கியுள்ளார்.

துப்பறியும் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் நடிக்க யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு -ஆர்.பாலா, இசை-வி.கோபி, ஸ்ரீபின்னணி இசை -சுரேஷ் சர்மா, பாடல்கள்-சுரேஷ் நாராயணன்தளபதி ராம்குமார்ஜி.நடனம் -ஆர்.கே சரவணன்

இப்படத்தை பி.ஆர்.எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவப்பிரகாஷுடன்  சோமனூர் மஞ்சுளா ரவிக்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில்,முட்டம் ஆகிய இடங்களில் நடந்துள்ளது.மொத்தம் 14 நாட்களில் ஒரே கட்டப் படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த 14 நாட்களில் ஒரு சண்டைக் காட்சி மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் ஆகியனவும் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ளது.விரைவில் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அரங்கில்  நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Related Posts