விஜய் ஆண்டனியுடன் இணைந்தார் ரம்யா நம்பீசன்
பாபுயோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். இந்தப் படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில்.சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர்,இசை இளையராஜா,
பாடல்கள் பழனிபாரதி, ஜெய்ராம்,கலை மிலன்,சண்டைப்பயிற்சி அனல் அரசு,படத்தொகுப்பு புவன் சந்திரசேகர்,நடனம் பிருந்தா சதீஷ்
இப்படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது.
அப்போது, விஜய் ஆண்டனி ரம்யா நம்பீசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்ஷன் காட்சிகள் படமானது.
அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளை 4 காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்தக் காட்சிகள் திரையில் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம் என்கிறார்கள்.











