சசிகுமாரும் எஸ்ராவும் சொன்னது அப்பட்டமான பொய் – சான்றுடன் சாடும் எழுத்தாளர்
புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் ச்சிகுமார் நாயகனாக நடித்து வெளியான அயோத்தி படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.
இதைத்தொடர்ந்து எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், இந்தக்கதை அவர் எழுதியதென்றும் திரைப்படத்துக்கென்றே எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருமகனும் எழுத்தாளர் மற்றும் தொழிற்சங்கவாதியுமான மாதவராஜ், இந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு ஆதாரமாக 2011 ஆம் ஆண்டு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அப்படியே எழுத்தாக்கி வெளியிட்டிருப்பதையும் பதிவிட்டிருக்கிறார்.
அழக்கூடத் திராணியற்றவர்கள என்கிற பெயரில் வந்திருக்கும் அது ஒரு ரம்ஜான் நாளில் நடந்திருக்கிறது.
அயோத்தி படம் தீபாவளி நாளில் நடக்கிறது அதைத்தவிர மற்ற எல்லாமே அப்படியே இருக்கிறது.
இது தொடர்பாக அவர் எழுதியைள்ள பதிவில்…
அயோத்தி திரைப்படம் யாருடைய ‘கதை’யும் அல்ல. உண்மை நிகழ்வு. அதில் நேரடியாக பங்கு பெற்ற இரண்டு தோழர்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உயிரோட்டமாய் முதன் முதலில் எழுத்தாக செப்டம்பர் 2011ல் ஆவணப்படுத்தியதும் ஒரு கதை போல எழுதியதும் நான். சம்பந்தப்பட்ட அந்த தோழர்களே என் பதிவைப் படித்து விட்டு கண் கலங்கினர்.
நான் எழுதியதன் மூலம் அந்த தோழர்களை எங்கள் சங்கமே கொண்டாடியது. தீராத பக்கங்களில் படித்து விட்டு பலரும் பாராட்டினர். எல்லாவற்றையும் அப்படியே மறைத்து விட்டு அல்லது புதைத்து விட்டு என் கதை என்றும், என் அறிவுச் சொத்து எனவும் உண்மையை புரட்டுவது யோக்கியமும், அறமும் ஆகாது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், அயோத்தியா பட தயாரிப்பாளர், இயக்குனருக்கும் என் கண்டனங்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
அப்படியானால், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தெரிந்தே பொய் சொன்னாரா? அதற்கு ச்சிகுமாரும் துணைபோனாரா? ஆகிய கேள்விகள் எழுகின்றன.











