சினிமா செய்திகள்

யுவனை மாற்றிய தயாரிப்பு நிறுவனம் ஒதுங்கிய செல்வராகவன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாணிக் காயிதம்’. இப்படத்தில், செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடைபெற்றுவருகிறது.

இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் யுவன்ஷங்கர்ராஜா. இப்போது அவர் படத்தில் இல்லையென்கிறார்கள்.

அவர் கேட்ட சம்பளத்தைத் தர தயாரிப்பு நிறுவனம் முன்வரவில்லை என்பதால் இப்படத்தில் பணியாற்றவியலாது என்று விலகிவிட்டாராம் யுவன்ஷங்கர்ராஜா.

செல்வராகவனும் இவ்விசயத்தில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டார் என்கிறார்கள்.

இதனால், சாணிக் காயிதம் படத்தின் இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். அவர் உற்சாகமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம்.

Related Posts