September 23, 2026
சினிமா செய்திகள்

மகான் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம் & துருவ் !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது.

ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது.

மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் சிம்ரன், பாபிசிம்ஹா, வானி போஜன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கான விக்ரம் & துருவ் விக்ரமுக்கான டப்பிங் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ட்விட்டர் மூலமாக உறுதி செய்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசைக் கோர்ப்பில் படத்துக்கான பாடல் பணிகள் நடந்துவருகிறது. விரைவிலேயே திரையில் ‘மகான்’ எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தை முடித்த கையோடு, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க விக்ரமும், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிக்க துருவ் விக்ரமும் செல்ல இருக்கிறார்கள்.

Related Posts