சினிமா செய்திகள்

மாநாடுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யாவிடம் ஏற்பட்ட மாற்றம்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்

டிகர்களான விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ‘எனிமி’.

இப்படத்தைத் தொடர்ந்து, புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்திருக்கிறார். இது விஷாலின் 31 ஆவது படம். இப்படத்தை விஷாலின் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

தொடர்ந்து, விஷாலின் 32 ஆவது படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். விஷாலின் அதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஆக, விஷாலின் 33வது படத்தை எனிமி படத்தைத் தயாரித்த வினோத் தயாரிக்கிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவிடம் படக்குழு ஏற்கெனவே பேசி உறுதி செய்து வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மாநாடு ரிலீஸூக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யாவுக்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். இந்நிலையில், விஷால் படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை மீண்டும் அணுகியிருக்கிறது படக்குழு. ஆனால், சம்பளத்தை உயர்த்திக் கேட்டிருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா.

பொதுவாக, படத்துக்கு சுமார் மூன்று கோடி வரை சம்பளம் பெறுவார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால், விஷால் படத்தில் நடிக்க ஆறு கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். அதாவது, சம்பளத்தை அப்படியே இரட்டிப்பாக்கியிருப்பதால் அதிர்ந்துவிட்டதாம் படக்குழு.

இது வேலைக்காது என, எஸ்.ஜே.சூர்யாவை வேண்டாமென்று படக்குழு முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது. வேறு நடிகரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் இறங்கிவிட்டதாகத் தகவல்.

Related Posts