சினிமா செய்திகள்

திரெளபதி இயக்குநரின் அறிவிப்பால் விஜய் அஜீத் பெயரில் சண்டை

அஜீத்தின் மைத்துனர் ரிச்சர்டை கதாநாயகனாக வைத்து திரெளபதி படத்தை இயக்கியிருந்த மோகன்.ஜி, அடுத்த படத்தையும் ரிச்சர்டை நாயகனாக வைத்தே எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று,எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன்.. ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன்.. அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்..
என்று சொல்லியிருந்தார்.

கொரோனா சூழல் காரணமாக அவர் இவ்வாறு சொல்லியிருக்கலாம்.

ஆனால், இப்போதும் நேற்று விஷ்ணுவிஷால் நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியிடப்பட்டது. இன்று இயக்குநர் அட்லி வெளீயிடும் புதியபடமொன்றின் அறிவிப்பு வெளீயிடப்பட்டது.

இதனால், இயக்குநர் மோகன்.ஜி யின் அறிவிப்புக்கு, தள்ளி வைப்பது என்பது அஜீத்துக்கும் அவர் ரசிகர்களுக்கும் புதுசா? என்று மாஸ்டர் என்கிற பெயரில் உள்ளவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு, அறிவித்த தேதியில் மாஸ்டர் படம் பார்த்தீங்க போல என்று மோகன்.ஜி பதில் சொல்ல சர்ச்சை தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.

விஜய்யும் அஜீத்தும் சும்மா இருந்தாலும் அவர்கள் பெயரைச் சொல்லி நடக்கும் சண்டைகளுக்கு அளவே இல்லாமல் போகிறது. 

Related Posts