சினிமா செய்திகள்

வாய்த்துடுக்கால் வாய்ப்பிழந்த அதர்வா

அதர்வா இப்போது ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்துவருகிறார்.இந்நிலையில், அவருடைய வாய்த்துடுக்கால் ஒரு பெரியபடத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்று திரையுலகில் பேசப்பட்டுவருகிறது.

அதன்விவரம்,

நவம்பர் ஐந்தாம் தேதியன்று அறிவிக்கப்பட்ட படம் லால்சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் விக்ராந்த் ஆகியோரோடு ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

லால்சலாம் படத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கும் வேடத்தில் நடிக்க முதலில் அதர்வாவை அணுகினார்களாம்.

அவரும் கதையெல்லாம் கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதன்பின் சம்பளம் குறித்த பேச்சு தொடங்கியிருக்கிறது.

அப்போது அதர்வா தரப்பில் இந்தப்படத்தில் நடிப்பதென்றால் ஐந்துகோடி சம்பளம் வேண்டும் என்று கேட்கப்பட்டதாம்.

அதிர்ச்சியடைந்த நிறுவனம், அதர்வா நடித்து எந்தப்படமும் ஓடவில்லை. நம்முடைய நிறுவனத்திலேயே அவரை வைத்து ஒரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம், அதையும் நகர்த்துவது சிரமமாக இருக்கிறது எனவே அவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கவியலாது கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டார்களாம்.

அதற்கு, ரஜினிகாந்த்தை வைத்துப் படமெடுக்கிறீர்கள் இந்தப்படத்துக்கு எவ்வளவு வியாபாரம் இருக்கும் என எனக்குத் தெரியாதா? எனவே நான் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்தால் நடிக்கிறேன் என்று வாய்த்துடுக்காகப் பேசியிருக்கிறார் அதர்வா.

உடனே, அவரை விட்டுவிட்டு விஷ்ணுவிஷாலிடம் பேசி ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

அதர்வா இப்படிப்பேசி வாய்ப்பை இழக்கலாமா? என அவருடைய நலம்விரும்பிகள் வருந்துகிறார்கள்.

Related Posts