இயக்குநர் அட்லியின் அறிவிப்பு – ரசிகர்கள் வரவேற்பு
இயக்குநர் அட்லி அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அட்லியின் நிறுவனம் சார்பில் வெளீயிடப்படும் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று சொல்லியிருந்தார்.
பலபேர் அந்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த அதேநேரம் உங்களுடைய அடுத்த படம் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் அவற்றிற்கு அவர் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு வெளீயிட்டுள்ள அறிவிப்பில், புது இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தகாரம் எனும் படத்தை அட்லி வெளியிடுவதாகவும் அதன் முன்னோட்டம் ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அந்தகாரம் என்றால் கும்மிருட்டு என்று பொருள். பார்வையற்ற கதாபாத்திரம் ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தைப் பார்த்து பிடித்துப் போனதால் தம் நிறுவனத்தின் சார்பில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார் அட்லி என்று சொல்கிறார்கள்.












