December 11, 2025
சினிமா செய்திகள்

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றது

அகாடமி விருது எனப்படும் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்போது (மார்ச் 13,2023 காலை) நடைபெற்றுவருகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் 95 ஆவது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் சிறந்த ஆவணப்பட குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

இப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது.

The Elephant whisperers

The Elephant whisperers

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாகப் பணிபுரிகின்றனர். 2017 ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு சென்று, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர்.

தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளைப் பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கி இருக்கிறார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.

அதற்குத்தான் தற்போது ஆஸ்கர் விருது வென்றுள்ளது ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’.

இந்த விருதை தயாரிப்பாளர் குனீத்மோங்கோ பெற்றார். இவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தைத் தயாரித்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts