செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த லைகா நிறுவனம்

ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் நடைபெற்றது.

மதிப்புமிக்க இந்த 16 ஆவது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்,

பெரும் வரவேற்பையும் மாபெரும் வெற்றியையும் பெற்ற திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) சிறந்த திரைப்படம் என்கிற பிரிவில் பரிந்துரை பெற்றது.

மேலும்,

சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி,

சிறந்த படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத்,

சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்

சிறந்த ஆடை வடிவமைப்பு
ஏகா லக்கானி

ஆகிய 5 பரிந்துரைகளையும் பெற்றுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க

லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார்பாக லைக்கா ஜி்.கே.எம்.தமிழ் குமரன், மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் சார்பாக நிர்வாகத் தயாரிப்பாளர் சிவா ஆனந்த்

ஆகியோருடன் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்,ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மற்றும் செல்வி. ஏகா லகானி ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வு தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை என்றால் மிகையில்லை.

Related Posts