கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பார்வையாளர்களின் அனுமதியை 100 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு இன்று காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! “ஈஸ்வரன்” பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு
டிசம்பர் 27 ஆம் தேதி இரவு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்திருக்கிறார். சுமார் அரைமணி நேரம் நடந்த அச்சந்திப்பின் போது, திரையுலகின் கஷ்டங்களை முதல்வரிடம் எடுத்துக்கூறிய விஜய், திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளிலும் மக்களை அனுமதிக்கும் அனுமதியை அரசு வழங்கினால்தான் திரையுலகம் மீண்டுவரும் வழி பிறக்கும். எனவே அதை நீங்கள் செய்து கொடுக்கவேண்டும்
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தயாராகி கிட்டத்தட்ட பத்துமாதங்கள் ஆகிவிட்டன. ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனாவால் எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்போது பல்வேறு நிலைகளைக் கடந்து 2021 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்போதுவரை தமிழ்நாடு திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட
2021 சனவரி 13 அன்று விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தணிக்கை டிசம்பர் 18 அன்று நடந்திருக்கிறது. படம் பார்த்த தணிக்கைக்குழுவினர், படத்தில் ஒன்பது இடங்களில் வெட்டு கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை ஒப்புக்கொண்டால் யு சான்றிதழ் கொடுப்பதாகவும் இல்லையெனில் யு ஏ சான்றிதழ் கொடுக்கப்
விஜய்யின் 65 ஆவது படத்தின் இயக்குநர் நெல்சன். இவர் 2010 ஆம் ஆண்டில் சிம்புவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தொடங்கினார். அப்படம் நடக்கவில்லை. அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றது. அதனால், இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பு அவருக்குக்
விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவது என்று முடிவெடுத்துவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களாக வெளியாகாமல் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை லலித் குமார் கைப்பற்றியுள்ளார். இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமானால் பங்குத்தொகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற தயாரிப்புத்தரப்பின் கோரிக்கை






















