வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ் மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது
விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் சனவரி 133 ஆம் தேதி வெளியானது. கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்திய அந்தப்படம் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்கிற்கு வரத் தொடங்கியதாகத் தெரிவித்தனர்.
ஐசரிகணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், 4 முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் உள்ள 4 கதைகளை கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இவற்றில், விஜய்சேதுபதி உட்பட பல முன்னணியினர்
கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் சனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாஸ்டர்’. விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் கொரோனா அச்சத்தை மீறி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 13 ஆம் தேதி வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கொரோனா சிக்கலுக்குப் பிறகு வெளியான பெரிய படம். நல்ல வசூலைப் பெற்று திரையுலகினருக்குப் பெரும் நம்பிக்கை அளித்திருக்கிறது. அதேசமயம் இந்தப்படம் வெளியாகும் முன்பு வரை விஜய் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. வெளியான
2021 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் ஈஸ்வரன் படத்தை வெளியிடுவதற்கு முன்பு, மாஸ்டர் திரைப்படக்குழுவினர் ஈஸ்வரன் படத்துக்குத் திரையரங்குகள் ஒதுக்கவிடாமல் செய்கின்றனர், சிம்புவுக்கு தயாரிப்பாளர் சம்பளமே தரவில்லை, மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகார் அடிப்படையில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம்
கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம். போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சனவரி 13 அன்ரு வெளியாகவிருக்கிறது. இதையொட்டி காலை 4 மணி மற்றும் ஏழு மணிக்கு சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான முன்பதிவுகளும் நடந்துவருகின்றன. சிறப்புக்காட்சிக்கான கட்டணமாக ஆயிரத்து நூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றனவாம். நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப தடை
பொங்கல் நாளையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தப்படக்குழுவினர்களின் கோரிக்கை மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் இரண்டு படங்களும் வெளியாவதற்கான வேலைகள் வேகம் பிடித்தன. இந்நிலையில்,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அப்படத்தை இயக்கவிருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இதன் படப்பிடிப்பு முழுமையாக



















