இரட்டை அர்த்தத்தில் பேசிய விஜய் திகைத்து நின்ற விஜய்சேதுபதி – விருந்தில் பரபரப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 13 ஆம் தேதி வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கொரோனா சிக்கலுக்குப் பிறகு வெளியான பெரிய படம். நல்ல வசூலைப் பெற்று திரையுலகினருக்குப் பெரும் நம்பிக்கை அளித்திருக்கிறது.
அதேசமயம் இந்தப்படம் வெளியாகும் முன்பு வரை விஜய் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. வெளியான பின்பு விஜய்சேதுபதி படத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன் தினம் தனியார் நிறுவனம் ஒன்றின் விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது….
விஜய் சார், தமிழக அரசு, லோகேஷ் கனகராஜ் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி. ஏனென்றால் மக்கள் திரும்பவும் திரையரங்கிற்கு வரத் தொடங்கியுள்ளார்கள். இது பலருக்குத் திரும்பவும் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் தொடங்கி வைத்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் இப்படி வந்ததற்கு விஜய் சார் மட்டுமே காரணம்.
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய் சேதுபதி பதிலளித்தார்.
விஜய் சேதுபதி படம்தான் மாஸ்டர் என்கிறார்களே?
இந்தக் கேள்வியே அவசியமில்லாத கேள்வி. விஜய் சாரால் மட்டுமே அந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது.
என்று கூறினார்.
விஜய்சேதுபதி இவ்வாறு கூறியதற்குக் காரணம் இருக்கிறதாம்.
மாஸ்டர் படம் வெளியான பின்பு அப்படக்குழுவினருக்கு விருந்து கொடுக்கப்பட்டதாம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்த விருந்து நிகழ்வில் விஜய் உட்பட படக்குழுவினர் பெரும்பாலானோர் கலந்து கொண்டனராம்.
அந்நிகழ்விறகு தாமதமாக வந்திருக்கிறார் விஜய்சேதுபதி. அவர் வந்தவுடன் விஜய்க்கு வணக்கம் சொல்லியிருக்கிறார். அப்போது விஜய், நல்லா செஞ்சிருக்கீங்க ப்ரோ என்று இரட்டை அர்த்தம் தொனிக்கச் சொன்னாராம் விஜய். இதனால் திகைத்த விஜய்சேதுபதி தர்மசங்கடமாகச் சிரித்தபடி நகர்ந்துவிட்டாராம்.
இதை அருகிருந்து பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனராம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் முழுமையாகத் தயாரானதுமே, விஜய்யிடம் போய் அண்ணா எவ்வளவோ எடிட் செய்தும் விஜய்சேதுபதியின் பாத்திரம் வலிமையாக அமைந்திருக்கிறது என்று சொன்னாராம். அப்போது விஜய் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.
ஆனால் படம் வெளியான பின் வந்த கருத்துகளால் அவர் வருத்தமடைந்திருக்கிறாராம்.
இந்த விசயங்களை அறிந்ததாலேயே விஜய்சேதுபதி இவ்வாறு பேட்டி கொடுத்தார் என்று சொல்கிறார்கள்.










