சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தின் நாயகன் யார் தெரியுமா?

விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவது என்று முடிவெடுத்துவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்கவிருப்பது ஒரு குரங்கு. அதை வைத்துக் கொண்டு சுவாரசியமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதோடு இதற்கான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை அலசி ஆராய்ந்து ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து வேலைகளையும் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

விஜய் 65 குறித்த அறிவிப்பு வெளியான பின்பு இப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் காத்திருந்தாராம்.

நேற்று (டிசம்பர் 10,2020) மாலை விஜய் 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுவிட்டது.

இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் அல்லது தைத் திங்களில் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் பற்றிய
அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Related Posts