சினிமா செய்திகள்

செல்வராகவன் தனுஷ் இணையும் படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடித்த’என்.ஜி.கே’ படத்தை இயக்கிய செல்வராகவன், அதன்பின் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு வடிவமைப்பு ஆகியனவற்றை சனவரி 13 இரவு 7:10 மணிக்கு வெளியிடுவோம் எனப் படக்குழு அறிவித்தது.

அதன்படி, ‘நானே வருவேன்’ என்ற தலைப்புடன் அடங்கிய முதல்பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு.

தற்போது தனுஷுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர்.

முதல்பார்வை பெயர் ஆகியனவற்றை வெளியிட்டுவிட்டாலும் படப்பிடிப்பு தொடங்கத் தாமதம் ஆகுமெனச் சொல்கிறார்கள்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் மற்றும் தனுஷ் நடிக்கவிருக்கும் ஆங்கிலப்படம் ஆகியனவற்றின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு இப்படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts