மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரம் படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் தாமதம் செய்கிறார். மகான் படம் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 6, 2024 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு… அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்
2021 சனவரி 28 ஆம் தேதியன்று, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மூன்று வருடங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று மார்ச் 12,2024) மீண்டும் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படக்குழுவினர் வெளியிட்டுள்ள
உதயநிதி, கீர்த்திசுரேஷ்,வடிவேலு, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாமன்னன். இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜூன் 29 அன்று வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய படமாக இருந்தது. திரையரங்குகளில் அதிக வசூலைப் பெற்றதையடுத்து ஜூலை 27 ஆம் தேதி
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதிஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன்.மக்களின் பேராதரவால் பெரும் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50 ஆவது நாளைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்,
நடிகர் விக்ரமின் மகன் துருவ்விக்ரம், 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்யவர்மா படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானார். அதன்பின் அவர் முதலில் நடித்த வர்மா படம் வெளியானது. இவற்றிற்குப் பிறகு மகான் படத்தில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான அந்தப்படத்தில் அவருடைய அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தப்படத்துக்குப் பின் நிறையப் பேர்
குடியரசுத்தலைவராகவே இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவ்ர் என்பதால் அவமானப்படுத்தப்படும் நாடு நம் நாடு.இக்கொடுமைக்கும் அநீதிக்கும் எதிராக ஓங்கிக் குரல்கொடுத்திருக்கும் படம்தான் மாமன்னன். சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஆதிக்கசாதி மாவட்டச் செயலாளர் முன் உட்காரவியலாத நிலையில் இருக்கிறார். இதை அறிந்து கொதித்துப் போகும் அவருடைய மகன்
உதயநிதி இப்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4 ஆம் தேதி
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது. ஆக்ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
ஒரு காலத்தில் காமெடியில் பட்டாஸாக வெடித்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. கடைசியாக 2017-ல் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்தார். இப்படம், இவருக்கு மிகப்பெரிய ரீ-எண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடிவேலுவுக்கு பெரிதாக படம் கைகொடுக்கவில்லை. சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படமும் இல்லையென்றாகிவிட்டது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்
உதயநிதி இப்போது மகிழ்திருமேனி இயக்கும் படம், ஆர்ட்டிகள் 15 என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்று, மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைதவிர அதியமான் இயக்கத்தில் ஒரு படம் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், அவர் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். ஆனது மட்டுமல்ல நாள்தோறும் மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இதனால்




















