ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். அரசியலில் இருப்பதால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். இனி போலீஸில் புகார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சென்னையில் நடிகர்கள் நடத்திய கண்டனப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை. தனக்கு அழைப்பில்லை என்று கூறியிருந்தார். அதோடு காவிரிச் சிக்கலில் கர்நாடகத்துக்கு ஆதரவான கருத்துகளைச் சொல்லியிருந்தார். இதுகுறித்து பிரபல கன்னட நடிகர் அனந்த்நாக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர்,
தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். இந்நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும், ஏவிஎம் சரவணன் அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன். இவர் 3-12-1939ல் பிறந்தார். தன்னுடைய 18 ஆவது வயதில் 9-4-58 ஆம் ஆண்டு அன்று ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு பணியாற்ற வந்தார். 9-4-2018 ஆம் நாளோடு 60 ஆண்டுகள் நிறைவடைந்தது.அவர் திரைத்துறையில் மணி விழா காணுகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை: 1. மக்களின் அடிப்படைத் தேவைகளைப்
ஏப்ரல் 8 அன்று நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நான்கு மணி நேரப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, அந்தப் போராட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.பேசினால்தான் பிரச்னை தீரும். மௌனப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைத்துறையில் ஆயிரம் பிரச்னை இருக்கும்போது, பிற போராட்டங்களில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப் போராட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுன போராட்டம் இன்று (ஏப்ரல் 8.2018) காலை 9 மணி ,உதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,கமல், ரஜினி, விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி, சூர்யா, தனுஷ்,
புதிய திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, மார்ச் 1-ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர்.மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் இரத்து செய்து விட்டனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கிக்கிடக்கிறது. இதுதொடர்பாக, டிஜிட்டல் சேவை அமைப்பினருடனும், திரையரங்கு உரிமையாளர்களுடனும் நடந்த
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் 7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: தமிழகம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது போல் உள்ளது.
படங்களைத் திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மார்ச் 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். இதனால், இந்த மாதம் திரைக்கு வரத் தயாராக இருந்த சுமார் 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மார்ச் 16-ந் தேதி முதல் திரைப்படப் படப்பிடிப்புகளும் நடக்காது என்றும் அறிவித்து உள்ளனர். இதற்கிடையே,





















