இயக்குநர் ஷங்கருக்கு பிரமாண்ட விழா – கமல் ரஜினி விஜய் பங்கேற்பு
1993 ஜூலை 30 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்த ஜெண்டில்மேன் படம் வெளியானது.
முதல்படமே வெற்றி என்றதோடு பிரமாண்ட இயக்குநர் என்கிற பெயரையும் அவ்ருக்குக் கொடுத்தது.
உலக அதிசயங்களையெல்லாம் காட்சிப் படுத்திய ஜீன்ஸ், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்த இந்தியன், முதல்வன் போன்று அவருடைய படங்கள் எல்லாமே கவனிக்கத்தக்கவை.
ரஜினியை வைத்து இவர் இயக்கிய எந்திரன், வசூலில் முதலிடம் பிடித்தது. ,விக்ரமை வைத்து இயக்கிய அந்நியன், ஐ ஆகிய படங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை.
இப்போது ரஜினி நடிக்கும் 2 ஓ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்து கமல் நடிக்கும் இந்தியன் 2 எடுக்கவிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர், திரைத்துறைக்கு வந்து இவ்வாண்டோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன.
அதைப் பெரிய அளவில் விழாவாகக் கொண்டாட விஜய் தொலைக்காட்சி முடிவு செய்திருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.
கமல் 50 விழா போல் சிறப்பாகச் செய்யவிருக்கும் இவ்விழாவுக்கு கமல், ரஜினி, விஜய், விக்ரம் உட்பட ஏராளமானோர் கலந்துகொள்ளவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.











