October 17, 2026
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் பட நாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இந்தப் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் இப்போது சூர்யா ஜோடியாக என் ஜி கே படத்திலும் கார்த்தி ஜோடியாக ஒரு படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Related Posts