நயன்தாராவுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ திருமணம்?
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனைக் காதலித்து வந்தாலும், இதுவரை தன் காதல் பற்றியோ திருமணம் பற்றியோ வெளிப்படையாக எங்கும் பேசவில்லை.
மார்ச் 23 அன்று சென்னை நட்சத்திர விடுதியொன்றில் ஒரு
ஆங்கில நாளேட்டின் சார்பாக, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெணக்ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
திரைப்படத்துறையைச் சார்ந்த நயன்தாராவுக்கும் விருது வழங்கப்பட்டது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நயன்தாராவுக்கு விருது வழங்கினார்.
அவ்விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய நயன்தாரா, மரியாதைக்குரிய இவ்விருது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் என் தாய், தந்தை மற்றும் வருங்காலக் கணவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
முதன்முறை வருங்காலக் கணவர் என்று பொதுமேடையில் நயன்தாரா பேசியிருப்பதால் விரைவில் அவர் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள்.
என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கேட்காதீர்கள் என்று அவர் பல்முறை சொல்லிவிட்டதால் இதுபற்றி அவருடைய கருத்தை அறிய யாரும் முயலவில்லை.











