மனிதர்களைக் கையாளுதல் என்பதில் கெட்டிக்காரராக இருக்கும் கதாநாயகன். அவருக்கு ஒரு காதலி. அந்தக் காதலிக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய ஆசை. அவர் வெளிநாடு சென்றால் பிரியவேண்டி வருமே என்பதால் நாயகன் அதற்கு உடன்படாமல் செய்யும் ஒரு காரியம். அவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிடுகிறது. அதன்பின் நாயகனுக்கு
1990 களில் கோவை மாவட்டம் போத்தனூர் தபால் நிலையத்தில் நடக்கும் கதை. அதனால் போத்தனூர் தபால் நிலையம் என்றே பெயர் வைத்துவிட்டார்கள். அந்த தபால் நிலையத்தில் இருக்கும் பணத்தை இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என நினைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார் அதன் அதிகாரி. போகிற வழியில் அந்தப்பணம் காணாமல் போகிறது. நேர்மையான அந்த அதிகாரி துடித்துப் போகிறார்.அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச்
தலைமைக்காவலராகப் பணிபுரியும் மாரிமுத்துவின் மகன் விஷால். அவரும் விரைவில் காவல்துறையில் சேரவிருக்கிறார். அம்மா துளசி, தங்கை ரவீனா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். சாதாரண மனிதராக வலம்வரும் விஷால், தங்கைக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக அசாதாரணமானவராக மாறுகிறார். இதுதான் படம். விஷால் கொஞ்சம் எடை கூடியிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் பின்னிப்பெடலெடுக்கிறார். காதல் காட்சிகளில்
வாழ்க்கைப் பயணத்தின் போது சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாக அமைந்துவிடுவார்கள் என்பதை நாசர் கதாபாத்திரத்தை முன்வைத்து ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போலச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர் விஷால்வெங்கட். நாசர்தான் படத்தின் நாயகன். அவருடைய அறிமுகத்தில் தொடங்கி அவர் சொல்லும் அறிவுரையில் படம் முடிகிறது. இடையில்,
சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தர்புகாசிவா, கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். அவர் இப்போது இயக்குநராக உயர்ந்திருக்கிறார். அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல்படம் முதல் நீ முடிவும் நீ.நேரடியாக ஜீ5 இணையத்தில் வெளியாகியிருக்கிறது இப்படம். நாயகி அமிர்தா மாண்டரின்,நாயகனாக கிஷன்தாஸ் மற்றும்
பெண்களை உயிராகப் பார்க்காமல் உடலாகப் பார்த்து அவற்றைக் காட்சிப்படுத்தி அதற்கு விலை நிர்ணயிக்கும் ஒரு கூட்டம்.அழகான பெண் என்றால் இலட்சக்கணக்கில் விலை. அழகற்ற பெண் என்றால் 999 ரூபாய் விலை என்பதுதான் பென்விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்கிற படத்தலைப்புக்குக் காரணம். முதலில் பெண் விலை என்றிருந்த தலைப்பு பலருடைய எதிர்ப்பு காரணமாக பென் விலை என்று மாறியிருக்கிறது. அக்கொடூர மனம்
கேரளாவில் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் குருப். தப்பைத் தைரியமாகச் செய்யும் வேடம் துல்கர் சல்மானுக்கு. அதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். அவருடைய திமிர் நடையும் அலட்சியப் பேச்சும் வேடத்துக்குப் பெரும்பலம். எண்பதுகளில் நடந்த கதை என்பதால் அக்காலத்துக்கேற்ப விதவிதமான உடைகள் மற்றும் தோற்றங்கள் என படம் நெடுக
ஒரு பிரமாண்ட அரண்மனை. அதற்குள் இருபது வருடங்களுக்கும் மேலாக ஓர் ஆவி சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நாயகி ராஷிகண்ணாவுக்கும் இன்னொரு நாயகியாக இருக்கும் சாக்ஷிஅகர்வால் குழந்தைக்கும் சிக்கல். எதனால் அப்படி? என்பதையும் அதற்குத் தீர்வு கண்டார்களா? என்பதையும் திகிலும் நகைச்சுவையும் கலந்து சொல்லியிருக்கும் படம் அரண்மனை 3. அரண்மனைக்கு மின்சாரக்கட்டமைப்பு வேலை செய்ய வரும்
அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதுதான் உடன்பிறப்பே. ஜோதிகாவின் ஐம்பதாவது படம் என்பதால் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய அறிமுகக்காட்சியை அமைத்திருக்கிறார்கள். குடும்பப் பாசம் மிகுந்த பெண் என்பதோடு மாந்தநேயம் மிக்க பெண் என்பதற்கான காட்சிகள் அதிகம். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொறுப்பை
ஒரு பெரிய நிறுவனத்தில் உயரதிகாரி வேலை, வீடு, மகிழுந்து, வேலையாட்கள் என வசதியான வாழ்க்கை. அன்பான மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் கொண்ட நல்ல குடும்பம். மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். இவ்வளவு வசதிகளும் கொண்ட தம்பிராமய்யாவுக்கு 25 ஆவது திருமண நாள் கொண்டாடுவதற்கு முந்தைய இரவு விபத்து காரணமாக மரணம் நேருகிறது. மரணத்திலிருந்து மீண்டும் குறிப்பிட்ட நாட்கள் உயிரோடு வாழ ஒரு




















