விமர்சனம்

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே – விமர்சனம்

பெண்களை உயிராகப் பார்க்காமல் உடலாகப் பார்த்து அவற்றைக் காட்சிப்படுத்தி அதற்கு விலை நிர்ணயிக்கும் ஒரு கூட்டம்.அழகான பெண் என்றால் இலட்சக்கணக்கில் விலை. அழகற்ற பெண் என்றால் 999 ரூபாய் விலை என்பதுதான் பென்விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்கிற படத்தலைப்புக்குக் காரணம்.

முதலில் பெண் விலை என்றிருந்த தலைப்பு பலருடைய எதிர்ப்பு காரணமாக பென் விலை என்று மாறியிருக்கிறது.

அக்கொடூர மனம் படைத்த கூட்டத்தின் மையமாக இருக்கும் ஒருவனுக்கு வரும் காதல் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியனவற்றைச் சொல்லியிருக்கிறது படம்.

நாயகன் ராஜ்கமல் உருகி உருகிக் காதலிப்பதும் இறுதிக்காட்சிகளில் உணர்ச்சிகரமாக நடிப்பதிலும் வெற்றி மதிப்பெண் பெறுகிறார்.

நாயகி ஸ்வேதா பண்டிட் அழகாக இருக்கிறார். காதல் கொண்டதும் ஏற்படும் மாற்றங்களைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். நம்பிக்கை துரோகத்தை எதிர்கொள்ளும் நேரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் நடிகர்கள் படம் வேகமாக நகர உதவியிருக்கிறார்கள்.

சதிஷ்குமார் கார்வாமோகன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக அமைந்திருக்கின்றன. விவேக் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னனி இசையும் அளவு.

எழுதி இயக்கியிருக்கும் வரதராஜ்,பெண்கள் பற்றிய விவரங்க்ள் எப்படி வெளியே போகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதோடு பெண்களை சக உயிராக மனுஷியாக மதியுங்கள் எனும் கருத்தைப் பொறுப்பாகச் சொல்லியிருக்கிறார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்.

Related Posts