ரஜினியின் பேட்ட படத்தைக் கைப்பற்றியது உதயநிதியின் ரெட்ஜெயண்ட்
தமிழின் மிகப்பெரிய படம் 2.ஓ. அப்படம் நவம்பர் 29 அன்று வெளியானது.
அப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பேட்ட.
இந்தப்படம் 2019 பொங்கல்நாளில் வெளியாகவிருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற கடும் போட்டி இருந்தது.
அந்தப்போட்டியில் வென்றிருக்கிறது உதயநிநியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம்.
பேட்ட படத்தைத். தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ரெட்ஜெயண்ட் பெற்றிருக்கிறார்.
என் எஸ் சி, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் ரெட் ஜெயண்ட் விநியோகம் செய்கிறதாம்.
கோவை மன்னார், டீகே பிரதாப், திருச்சி எல்.ஏ சினிமாஸ் ஆகியோர் விநியோகம் செய்கிறார்களாம்.
இவர்கள் எல்லோருமே ரெட் ஜெயண்டின் வழக்கமான விநியோகஸ்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.










