ரஜினி படத்தில் இணைந்த தனுஷ் – ரசிகர்கள் உற்சாகம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் பாடல்கள் நாளை (டிசம்பர் 9) வெளியாகவுள்ளது.2019 பொங்கல் நாளில்
படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார்,இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘மரண மாஸ்’ மற்றும் ‘உல்லாலா’ ஆகிய பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், படத்தின் பாடல்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது படக்குழு.
படத்தில் மொத்தம் 6 பாடல்களும், 5 தீம் இசையும் இடம்பெற்றுள்ளன. 3 பாடல்களை விவேக்கும், மீதமுள்ள 3 பாடல்களை தனுஷ், கார்த்திக் சுப்பராஜ், கு.கார்த்திக் ஆகியோரும் எழுதியுள்ளனர். தன்னுடைய படங்களில் பாடல்கள் எழுதியிருக்கும் ‘பொயட்டு’ தனுஷ்முதன்முதலில் ரஜினிக்கு பாட்டு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு வெளியானதும் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.











