February 12, 2025
சினிமா செய்திகள்

அஜீத் 61 படப்பிடிப்பு தொடக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார்.

அஜித் நடிக்கும் அந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடவில்லை. ‘ஏகே61’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் 3 ஆவது முறையாக அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார். சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்பராயன் இருவரும் சண்டைப்பயிற்சியாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஏப்ரல் 11 அன்று தொடங்க உள்ளது என்றும் அதற்காக ஐதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் சென்னை அண்ணாசாலை போன்ற பிரமாண்ட அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது.

தொடர்ச்சியாக 2 மாதங்கள் அங்கேயே படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அஜீத் 61 படத்தொடக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனிகபூர். அஜீத்குமாரின் அதிரடி சாகசம் இன்று தொடங்கியது என்கிற குறிப்புடன் ஒரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Related Posts