December 19, 2025
சினிமா செய்திகள்

பிரகாஷ்ராஜ் சர்ச்சை – தமிழ்நாட்டிலும் தொடர்கிறது

மூவி ஆர்டிஸ்ட் அசோசியன் என்கிற பெயரில் செயல்படும் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது.

அந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.அவர் தலைமையிலான அணியில் நடிகை ஜெயசுதா உள்ளிட்ட பலர் போட்டியிடுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நடிகை ஜீவிதா, தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு, ஹேமா ஆகியோரும் தலைவர் பதவிக்குப்போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னடரான பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கலைஞர்களிடம் மொழி பேதம் பார்க்கக்கூடாது என்று சொல்லி அவருக்கு ஆதரவாகச் சிலர் பேசிவருகிறார்கள்.

ஆந்திராவில் இது பெரும் சர்ச்சையாக இருக்கும் நேரத்தில், தமிழகத்தில், எங்களுக்குத் தேவை தமிழ் நடிகர் சங்கம் எனும் பொருள்பட we need tamil actors association என்கிற குறிச்சொல்லை உருவாக்கி அதில் ஏராளமானோர் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.

2015 இல் தமிழ்நாட்டில் நடிகர் சங்கத் தேர்தல் நடந்தபோது, தமிழ் நடிகர் சங்கம் குறித்த கோரிக்கை பலமாக இருந்தது.

அதன்பின் அது அப்படியே கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவிட்டது.

இப்போது, நாங்கள் மட்டும் இளித்தவாயர்களா? கன்னடர் முன்னணி நடிகராக இருக்கிறார், தெலுங்கர் விஷால் நடிகர் சங்கத்தலைவராக இருந்தார் என்பது உட்பட பல விசயங்களைச் சொல்லி தமிழ் நடிகர் சங்கம் வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.

டுவிட்டர் டிரெண்டில் இருந்தாலும் திரைத்துறையினர் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை.

Related Posts