October 16, 2026
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று, படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் வெளியிடவிருக்கிறார்கள்.

பொன்ராம் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சிவகார்த்திகேயன்.

24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

அறிவியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால், இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இப்படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது. ஏற்கெனவே பொன்ராம் இயக்கும் படத்தின் உரிமையையும் சன் தொலைக்காட்சியே வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts