சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஆகிறார் இயக்குநர் பொன்ராம்

இயக்குநர் பொன்ராம் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

அண்மையில் அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா வெளியானது.

இந்நிலையில் அவருடைய அடுத்த படம் பற்றி ஒரு தகவல் உலாவருகிறது.

அடுத்த படத்தை அவர் இயக்கவில்லை. தயாரிக்கிறார் என்று சொல்கிறார்கள்.

உதயநிதி நடித்த பொதுவாக எம்மனசுதங்கம் படத்தை இயக்கிய தளபதிபிரபு இயக்கும் புதிய படத்தை பொன்ராம் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின் கதையை பொன்ராம் எழுதியிருக்கிறாராம்.

இந்தப்படத்திற்கான வேலைகள் இப்போது தொடங்கியிருக்கின்றனவாம். திரைக்கதை எழுதும் பணி மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts