சினிமா செய்திகள்

வலிமைக்குப் போட்டியாக வரும் பிரபாஸ் படம் – உதயநிதி வெளியிடுகிறார்

பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத்
தயாரித்துள்ளனர்.

இப்படம் சனவரி 14,2022 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட பன்மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

சனவரி 7 ஆம் தேதியன்று வெளியாகவிருந்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகாத நிலையில் இப்படக்குழு மிகுந்த உற்சாகமாக ஏராளமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

தமிழிலும் இந்தப்படம் பெரிய அளவில் வெளியாகவிருக்கிறது.

தமிழில் இந்தப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. அந்நிறுவனம் இப்படத்தை வெளியிடவிருப்பதால் அதிகத் திரையரங்குகள் இந்தப்படத்துக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத்தின் வலிமை படத்துக்குப் போட்டியாக இப்படம் உருவெடுக்கும் என்பதால் விஜய் இரசிகர்கள் இப்படம் பற்றிய செய்திகளை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

Related Posts