மணிரத்னம் மீது விஜய்சேதுபதி அதிருப்தி
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி,அருண்விஜய்,அரவிந்த்சாமி ஆகிய நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் செக்கச் சிவந்த வானம்,
இந்தப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்த விஜய்சேதுபதி கடும் மனவருத்தத்தில் இருந்தாராம்.
ஏனெனில் தொடக்கத்தில் இருந்தே படம் பற்றிய செய்திகள் மற்றும் விளம்பரங்களில் அவருக்கு உரிய இடம் இல்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்திருக்கிறது.
அதனால்தான், அப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவுக்குக் கூட அவர் வரவில்லை என்கிறார்கள்.
சென்னையில் நடைபெற்ற தமிழ்ப்படத்தின் பாடல் விழா மட்டுமின்றி ஐதராபாதில் நடைபெற்ற தெலுங்குப் பதிப்பின் பாடல் வெளியீட்டுவிழாவிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், அவரை சமாதானம் செய்யும் விதமாக இன்று (செப்டம்பர் 26) வெளியான விளம்பரங்கள் அனைத்திலும் அவருடைய படம் மட்டும் இடம்பெற்றிருந்ததாம்.
இதனால் அவர் திருப்தி அடைந்தாரா? என்பது நாளை தெரியவரும்.











