செய்திக் குறிப்புகள்

புதிய தயாரிப்பு நிறுவனம் வருகிறது – தமிழ் தெலுங்கில் படம் தயாரிப்பு

திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்கள் மட்டும் பாவப்பட்டவர்கள், அவர்கள் மட்டும் பெரும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டாலும் நாள்தோறும் புதியவர்கள் வரவும் நடந்து கொண்டேயிருக்கிறது. அந்த வரிசையில், மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் புதிய நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்நிறுவனம், முதல் முயற்சியாக வித்தியாசமான சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையைத் தேர்வு செய்துள்ளது.

வல்லூரி ஸ்ரீனிவாச ராவ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சின்னா வெங்கடேஷ் இயக்குகிறார். சாய் கார்த்திக் ஜாடி தமிழில் வழங்குகிறார்.

படம் பற்றி தயாரிப்பாளர் வல்லூரி சீனிவாச ராவ் கூறியதாவது..

வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையைத் தேர்வு செய்துள்ளோம். மேலும்,இது ஓர் அழகான காதல் படமும் கூட. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.

இதுகுறித்து சாய் கார்த்திக் கூறியதாவது..

புதிய தோற்றத்தில் இந்தப் படம் இருக்கும் என்று தைரியமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் கதையில் பல திருப்புமுனைகள் உள்ளன. புதிய இயக்குநர் சின்னாவை பல ஓடிடி நிறுவனங்கள் அழைத்தன. ஆனால் அவர் படம் திரையரங்கில் வரவேண்டும் என்ற ஆசைப்படுகிறார். அதற்கேற்ப இந்தப் படத்தைப் பெரிய படமாக உருவாக்குகிறோம். அதனால்தான் சொந்த நிறுவனத்தில் இரண்டு மொழிகளில் படமாக்குகிறோம். இதில் இரு மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறோம்.

இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts