விமர்சனம்

மாணிக் – திரைப்பட விமர்சனம்

2019 ஆம் ஆண்டில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது மாணிக்.

நாயகனாக நடித்திருக்கும் மா.கா.ப.ஆனந்த்தின் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. அதற்கேற்ப நடித்திருக்கிறார். எல்லாவித பாவங்களையும் வெளிப்படுத்த முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்.

நாயகியாக சுஸாகுமார். நன்றாக இருக்கிறார்.நன்றாக நடனம் ஆடுகிறார். நல்ல திரைக்கதைகள் அமைந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும்.

வில்லனாக நடித்திருக்கும் அருள்தாஸின் அட்டகாசங்கள் தாள முடியவில்லை. லாஜிக் இல்லாவிட்டால் குற்றமில்லை நகைச்சுவையாவது இருக்கவேண்டாமா?

நாயகனின் நண்பராக வரும் வத்சன், மதுமிதா, அனு, சில காட்சிகளில் மட்டும் வருகிற மனோபாலா ஆகியோர் கொடுத்த வேலையச் செய்திருக்கிறார்கள்.

தரண்குமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தேவைக்கேற்ப இருக்கின்றன.

பழனிகுமாரின் ஒளிப்பதிவு நாயகன் வருகிற காட்சிகளுக்கும் வில்லன் வருகிற காட்சிகளுக்கும் வேறுபாடு காட்ட முயன்றிருக்கிறது.

எவ்வித லாஜிக்கும் பார்க்காமல் நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு திரைக்கதை.அமைத்து இயக்கியிருக்கிறார் புதுஇயக்குநர் மார்ட்டின்.

நாயகனிடம் காதலைச் சொல்லும் பெண்களின் நிலை என்னவாகிறது என்கிற இயக்குநரின் கற்பனை ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. அதிலும் நாயகி காதலைச் சொல்லும்போது நடக்கும் காட்சிகள் விரசம் என்றாலும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன.

அதுபோல இன்னும் சில காட்சிகள் அமைந்திருந்தால் மாணிக், பாட்ஷாவாகியிருப்பார்.

நாயகன் மா.கா.ப.ஆனந்துக்கு இது முக்கியமான படம்.

Related Posts