செய்திக் குறிப்புகள்

முகநூல் பயன்படுத்தும் பெண்களை எச்சரிக்கும் படம்

மார்ச் 8 ஆம் நாள் சர்வ தேச மகளிர் தினம். இதை முன்னிட்டு “கருத்துகளைப் பதிவு செய்” படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.இப்படத்தைத் தயாரித்து இயக்குபவர் ராகுல்.

இப்படம் முகநூல் பயன்படுத்தும் எல்லாப் பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.

திரையுலகில் ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஆழமாகக் காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

அந்த நம்பிக்கையை படத் தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாகப் பதிய வைத்த நிறுவனம் ஆர்பிஎம் சினிமாஸ்.

ஜித்தன் 2 , 1 AM ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய காலத் தயாரிப்பாக

கருத்துகளைப் பதிவு செய் படத்தைத் தயாரிக்கிறது..

இந்தப் படத்தில் கலையுலகின் இலட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

படத்துக்கு ஒளிப்பதிவு – மனோகர்,இசை – கணேஷ் ராகவேந்திரா,பாடல்கள் – சொற்கோ, கலை – மனோ,
நடனம் -எஸ்.எல்.பாலாஜி,சண்டைப்பயிற்சி -ஆக்‌ஷன் பிரகாஷ்

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள பாடம் என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.

Related Posts