சந்திரமுகி 2 இல் கங்கனாரணாவத் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார்.
இப்போது அவருடைய இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார், வடிவேலு, சுபிக்ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கீரவாணி இசையமைக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை கங்கனாரணாவத் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்திகள் கடந்த சில வாரங்களாகவே வந்துகொண்டிருந்தன.
இந்நிலையில், இன்று அத்தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது லைகா நிறுவனம்.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சந்திர்முகியின் உலகத்தில் கங்கனாரணாவத் இணைகிறார் என்று சொல்லி எக்கச்சக்க நகை அலங்காரங்களுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இதனால், சந்திரமுகி 2 படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி பேசும் மாநிலங்களிலும் வெளியாகும் என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அவர் டிசம்பர் மாதம் முதல் ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.











