சினிமா செய்திகள்

காஞ்சனா 4 படத்தின் பட்ஜெட் மற்றும் நாயகி – விவரம்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார்.

திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது.

‘காஞ்சனா’ படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார் ராகவா லாரன்ஸ்.

அப்படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

திரைக்கதை எழுதி முடித்து அதன்படி பார்த்தால் படத்தின் மொத்த செலவுத்தொகை மிகப் பெரியதாகி விட்டதாம்.

அந்தப்படத்தைத் தயாரிக்கப் பல நிறுவனங்கள் முன் வந்தன. மொத்த செலவுத் தொகையைக் கேட்டு பின்வாங்கியவர்களும் உண்டு. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நாங்கள் தயாரிக்கிறோம் என்றும் பலர் முன்வந்திருக்கின்றனர். அவற்றில் சரியானதைத் தேர்வு செய்வதில் நிதானம் காட்டி வந்தார்.

இப்போது அப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் எதுவென முடிவாகிவிட்டதாம்.

காஞ்சனா 4 படத்தை மும்பையைச் சேர்ந்த கோல்டுமைன் எனும் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.

இப்படத்தின் மொத்த செலவுத் தொகை சுமார் நூறு கோடி என்று திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.இது ராகவா லாரன்ஸ் சொன்ன தொகையை விடக் கொஞ்சம் குறைவுதான் என்று சொல்லப்படுகிறது.

காஞ்சனா 4 படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க நினைத்தாராம் ராகவா லாரன்ஸ்.

ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்பின், காஞ்சனா 4 படத்தில் பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக்கத் திட்டமிட்டு அவரிடம் பேசியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

அதைத்தொடர்ந்து படத்தின் கதையைக் கேட்டிருக்கிறார் பூஜாஹெக்டே.கதை அவருக்குப் பிடித்திருக்கிறதாம். அடுத்து சம்பள விசயம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

அது சரியாக அமைந்துவிட்டால் அவர் படத்தில் நடிப்பது உறுதியாகிவிடும்.

பூஜா ஹெக்டே நடிப்பது குறித்த உறுதி தெரிந்தவுடன் காஞ்சனா 4 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அதைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.

காஞ்சனா வரிசைப் படம் என்றால் அது நிச்சய வெற்றி என அனைவரும் நம்புவதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

நல்லது நடக்கட்டும்.

Related Posts