November 5, 2025
சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணத்தை உறுதிப்படுத்திய பிரபல நடிகர்

தமிழ்த்திரையுலகின் கதாநாயகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். காவல்துறை அதிகாரியின் மகனான இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு,ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது ஜகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். எழில் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

விஷ்ணு விஷாலுக்கு 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.நடிகர் நடாராஜின் மகள் ரஜனியை திருமணம் செய்திருந்தார். கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

இப்போது பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை விஷ்ணுவிஷால் இரண்டாவதாகத் திருமணம் செய்யவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அதுகுறித்து விஷ்ணுவிஷால் எந்தத் தகவலும் சொல்லவில்லை. தற்போது, ஜூவாலாகட்டாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விஷ்ணுவிஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதன்மூலம் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை உறுதி செய்திருக்கிறார் விஷ்ணுவிஷால் என்று சொல்கிறார்கள்.

Related Posts