நேரடியாக இணையத்தில் படம் வெளியீடு – அட்லி முடிவால் சர்ச்சை
இயக்குநர் அட்லி, புது இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தகாரம் எனும் படத்தை வெளியிடுவதாக ஏப்ரல் 12 ஆம் தேதி அறிவித்தார். அதன் முன்னோட்டம் ஏப்ரல் 14 அன்று வெளியானது.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அந்தகாரம் என்றால் கும்மிருட்டு என்று பொருள். பார்வையற்ற கதாபாத்திரம் ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தைப் பார்த்து பிடித்துப் போனதால் தம் நிறுவனத்தின் சார்பில் வெளியிடுவதாக அறிவித்திருந்தார் அட்லி.
இப்போது இந்தப்படத்தையும் நேரடியாக இணையத்தில் வெளியிட முடிவு செய்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம்.
இப்படம் ஜூலை மாதத்தில் நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே சூர்யா, கார்த்திக்சுப்புராஜ் ஆகியோர் தமது படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிட முன்வந்ததற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுங்கோபமடைந்து அவர்களைத் திட்டித் தீர்க்கிறார்கள்.
இப்போது அவர்கள் வரிசையில் அட்லியும் சேர்ந்திருக்கிறார்.










