சினிமா செய்திகள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது அயலான், டான் ஆகிய படங்கள் தயாராகியிருக்கின்றன. இவற்றில் டான் முதலிலும் அடுத்து அயலானும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இவற்றிற்கடுத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றில் தெலுங்கு இயக்குநர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை முடித்துவிட்டு அல்லது அதற்கிடையிலேயே கமல் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.

இந்நிலையில், இன்னொரு படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதற்காக இயக்குநர் மற்றும் கதாநாயகன் ஆகிய இருவருக்கும் முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.

நாயகி மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் முடிவான பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்குமென்கிறார்கள்.

தெலுங்குப்படம் மற்றும் கமல் தயாரிக்கும் படம் ஆகியனவற்றுக்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு இருக்குமென்கிறார்கள்.

Related Posts