சுந்தர்.சி சம்பளம் – குழப்பத்தில் ரஜினி படம்
ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்.சி ஒருபடம் இயக்கவிருக்கிறார்.அந்தப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.ஆனால் ரஜினிகாந்த் தயாரிப்பு நிறுவனத்தை மாற்றிவிட்டார்.
இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது.
இதற்கான முன் தயாரிப்பு வேலைகள் தொடங்குவதற்கு முன்பாக அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடப்படும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.
அதில் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.
என்ன குழப்பம்?
இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு குறித்த திட்டமிடலின் போது இயக்குநர் சுந்தர்.சி க்கு இப்போதைய சந்தைமதிப்பின் படி சம்பளம் போட்டிருக்கிறார்கள்.
அதைப்பார்த்த சுந்தர்.சி கவலையடைந்துவிட்டாராம். ரஜினிகாந்த் நடிக்கிறார் கமல்ஹாசன் தயாரிக்கிறார் படத்தின் கதை பெரிது அதற்கான செலவும் பெரிது என்பதால் தன்னுடைய சம்பளத்தையும் இருமடங்காக உயர்த்திக் கேட்கலாம் என்று திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால், தயாரிப்பு நிறுவனத்தினரே அவருடைய சம்பளத்தை நிர்ணயித்துவிட்டனர்.அது அவர் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருக்கிறது. இதைச் சற்றும் எதிர்பாராத சுந்தர்.சி என்னுடைய சம்பளம் இவ்வளவு என்று சொல்லியிருக்கிறார்.அது அவர்கள் நினைத்ததைவிட இருமடங்குக்கு மேல் இருந்திருக்கிறது.
இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.
இப்போது அதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.
எப்படியும் சுந்தர்.சி கேட்ட சம்பளம் அவருக்குக் கிடைக்காது.அதேசமயம் தயாரிப்பு நிறுவனம் நினைக்கும் சம்பளத்தையும் கொடுக்கமுடியாது என்கிற நிலை.
இதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு சம்பளம் கொடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல்.இதுதொடர்பான பேச்சுகள் இன்னும் சில நாட்களில் நிறைவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
வழக்கமாக ஒவ்வொரு பட உருவாக்கத்தின்போதும் இதுபோன்ற செய்திகள் உலவுவது மிக இயல்பான ஒன்றுதான் என்றாலும் கமல் தயாரிக்கும் படம் ரஜினி நடிக்கும் படத்திலும் இதுபோன்று நடப்பதுதான் கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.
எல்லாப் பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக நடந்து முடிந்தால் கமல்ஹாசனின் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்கிறார்கள். இல்லையெனில், படப்பிடிப்புக்குப் பல மாதங்கள் இருப்பதால் இப்போதே அறிவிக்கவில்லை.படப்பிடிப்புக்குப் போகும் நேரத்தில் அறிவிப்போம் என்று சொல்லிவிடுவார்கள் என்பதே இப்போதைய நிலை.










