ஹரீஷ்கல்யாணின் திரைப்பயணத்தில் ஓர் அதிரடி

தாராள பிரபு, ஓமணப்பெண்ணே ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, எல்ஜிஎம், பார்க்கிங்,லப்பர்பந்து ஆகிய படங்களோடு அதிரடிப்படமாக உருவாகிக் கொண்டிருக்கும் டீசல் ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் ஹரீஷ்கல்யாண்.
இவற்றில் டீசல் படத்தை அடங்காதே பட இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார். இப்படத்தை தர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் (Third Eye Entertainment) சார்பில் எம்.தேவராஜுலு தயாரிக்கிறார்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் பி.சசிகுமார், எஸ்.கருணாஸ், வினய் ராய், அன்னய்யா, டி.பி.அருண்பாண்டியன், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா, தீனா, தங்கதுரை, லக்ஷ்மி சங்கர், தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார், சச்சின், ரமேஷ் திலக், செல்வி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, ரேம்போன் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ராஜ்சேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் ‘டீசல்’ படக்குழுவினர்,வெகுமக்கள் நலனை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியிருக்கும்
இந்தப்படம் ஹரிஷ் கல்யாணின் திரைப்பயணத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொடுக்கும் என்று நம்பிக்கையாகச் சொல்கின்றனர்.