சினிமா செய்திகள்

தெலுங்குப் படத்துக்காக தனுஷ் வாங்கும் சம்பளம் – ஆச்சரியத்தில் திரையுலகம்

தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக்நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.

அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு முன்பே ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இவற்றோடு மித்ரன்ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படமும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,ஏப்ரல் 23,2021 அன்று தனுஷ் வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறியுள்ளார்.

இவ்வளவு படங்கள் இருக்கும்போது ஜூன் 18 அன்று, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடித் தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றும் அப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இப்போது வெளியிடக் காரணம் இருக்கிறதாம்.

இந்தப்படத்தில் நடிப்பதற்காக தனுஷுக்கு இதுவரை இல்லாத அளவில், இருபத்தைந்து கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.மூன்று மொழிகளில் வெளியாகும் படம் என்பதால் இவ்வளவு சம்பளம் என்றும் இதனாலேயே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு அதன் அறிவிப்பையும் உடனே வெளியிட தனுஷ் ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் அந்தப்படத்தின் அறிவிப்பை இப்போது வெளியிட்டிருக்கிறார்களாம்.

செய்தியறிந்த திரையுலகினர் தனுஷுக்கு இவ்வளவு சம்பளமா? என ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Related Posts