September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 81)

விமர்சனம்

விமர்சனம்

100 சதவீத காதல் – திரைப்பட விமர்சனம்

காதலர்களுக்குள் நான் என்கிற தன்முனைப்பு இருக்கவே கூடாது என்பதை விரல்நீட்டி வசனம் பேசாமல் காட்சிகள் மூலம் உணர்த்த முயன்றிருக்கும் படம் 100 சதவீத காதல். எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பில்  எப்போதும் முதல்நிலை மாணவர்.  அவருடைய அத்தைபெண் ஷாலினி
விமர்சனம்

சைரா நரசிம்ம ரெட்டி – திரைப்பட விமர்சனம்

1847 ஆம் ஆண்டு ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி. சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது. அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில்
விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை – திரைப்பட விமர்சனம்

பாரதிராஜாவின் பேரன், அர்ச்சனாவின் மகன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என முழுக்க முழுக்க உறவுகளை நேசிக்கும் குடும்பப் பொறுப்புள்ள இளைஞன் சிவகார்த்திகேயன். தந்தை இல்லாமல் தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார். அவருடைய பெரியப்பா வேலராமமூர்த்தி,சித்தப்பா பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் அவருக்கு எதிர்ப்பு.  இந்தச் சூழலில், தங்கை திருமணம் அதனால் வரும் சிக்கல்கள் அதிலிருந்து அவர்
விமர்சனம்

காப்பான் – திரைப்பட விமர்சனம்

இயற்கை விவசாயம் செய்து மண்ணைப் பாதுகாக்கும் விவசாயி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி நாட்டையும் பாதுகாப்பதால் இவர் காப்பான். இராணுவ உளவுப் பிரிவு, பிரதமரின் சிறப்புப்பாதுகாப்புப் பிரிவு  தமிழக விவசாயி ஆகிய மூன்று பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் சூர்யா. மூன்றுக்கும் பொருத்தமாக இருக்கிறார் என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இராணுவம் போல் விவசாயமும் ஒரு சேவை.
விமர்சனம்

சூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்

சின்னச் சின்ன தப்புகளைச் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் நாயகன் துருவாவும் அவரது மாமா ஷாராவும். அதன் தொடர்ச்சியாக நாயகி இந்துஜாவைக் கடத்திப் பணம் பறிக்க முயல்கிறார்கள்.  பணம் கேட்கப்போகும்போது இந்துஜாவின் அப்பா கொல்லப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து அது தொடர்பாகத் துப்புத்துலக்குகிறார் துருவா. அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நாயகியைப் பார்த்ததும் காதல் கொள்வதால் இந்த வேண்டாத
விமர்சனம்

சிவப்பு மஞ்சள் பச்சை – திரைப்பட விமர்சனம்

மலையேறினாலும் மச்சான் தயவு தேவை என்று தமிழில் பழமொழி உண்டு. அம்மொழிக்கு வலுச்சேர்ப்பதோடு பாசம் என்கிற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் அக்கா தம்பி. அத்தையின் பாதுகாப்போடு தனித்து வசிக்கிறார்கள். நீ எனக்கு அம்மா நான் உனக்கு அப்பா என்று பாசம்
விமர்சனம்

மகாமுனி – திரைப்பட விமர்சனம்

மகாதேவன் முனிராஜ் ஆகியோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள். சென்னையில் மகாதேவனும் ஈரோட்டில் முனிராஜும் வசிக்கிறார்கள். ஒருவரையொருவர் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை வைத்து அதற்குள் ஏராளமான சமுதாயச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கும் படம் மகாமுனி. மகாவாகவும் முனியாகவும் நடித்திருக்கிறார் ஆர்யா. மீசை வைத்திருந்தால் மகா, மீசையில்லாமல் இருந்தால்
விமர்சனம்

சாஹோ – திரைப்பட விமர்சனம்

ஐதர்அலி காலத்துப் பழிவாங்கும் கதை. கோடிகளைக் கொட்டி மாயாஜாலம் காட்டியிருக்கிறார்கள். படம் தொடங்கும் போதே ராய் என்கிற பெரிய தாதா, தன் சாம்ராஜ்யத்தை எப்படி பெரிதாக்கினார் இப்போது என்ன நிலை என்பது உட்பட நீண்ட அறிமுகம் நிறைய பாத்திரங்களை அறிமுகப் படுத்துகிறார்கள். அதுவே போதும் என்றாகிவிடுகிற நேரத்தில்,பிரபாஸ் வருகிறார். அவர் வரும்போதே ஒரு சண்டையுடன் வருகிறார். ஒரு ஆளிடம் ஒரு
விமர்சனம்

சிக்சர் – திரைப்பட விமர்சனம்

மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது என்கிற மாலைக்கண் நோய் உள்ள நாயகன் அதை மறைத்து காதலிக்கிறார். கல்யாணம் வரை போகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் வைபவ், கண் தெரியாத நேரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கண் தெரியாத நேரத்தில் நடனம் ஆடும்போது கூட பார்வையற்றவர்களின் உடல்மொழியைக்
விமர்சனம்

மயூரன் – திரைப்பட விமர்சனம்

கிராமப் புறங்களிலிருந்து பல கனவுகளோடு படித்துப்பட்டம் வாங்க வேண்டும் என்று நகரத்துக்கு வந்து கல்லூரியில் சேருகிறார்கள் பல மாணவர்கள். அவர்களின் வாழ்க்கையை தங்கள் சுயநலத்துக்காக வேட்டையாடும் கொடிய மனிதர்களை அடையாளம் காட்டுகிற படம் மயூரன். அஞ்சன், பாலாஜி ராதாகிருஷ்ணன், அமுதவாணன் ஆகியோர் மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களில் நாயகன் அஞ்சனுக்குப் படத்தில் சேகுவேரா என்று