விமர்சனம்

கிரிஷ்ணம் – திரைப்பட விமர்சனம்

ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் கிருஷ்ணம்.

அறிவியல் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட கடவுள் நம்பிக்கை பெரிது என்று சொல்லியிருக்கிறார்கள்.

நாயகன் அக்ஷய் கிருஷ்ணா பணக்கார வீட்டுப் பையன். அன்பான பெற்றோர் அளவுக்கதிகமான வசதி, நல்ல கல்லூரியில் படிப்பு என்று இருக்கும் அவருக்கு அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர். அவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் நாய்கி ஐஸ்வர்யா உல்லாஸ் மீது காதல்.

இந்நிலையில் நாயகனுக்கு வருகிற ஒரு விநோதமான நோயும் அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே படம்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சாய்குமார் படத்தைத் தாங்கிப்பிடித்திருக்கிறார்.அம்மாவாக நடித்திருக்கும் சாந்தி கிருஷ்ணாவும் நன்று.

மருத்துவமனையில் நடக்கும் காட்சிகள் பரபரப்பாக இருக்கின்றன.
நாயகனுக்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் பேசும் வசனம் மிகவும் கவனிக்கவேண்டியது.

நாயகனைக் காப்பாற்றும் கடவுள் அச்சிறு பெண் குழந்தையைக் காப்பாற்றாதது ஏனோ?

கொடுத்த கதையை சரியாகப் படமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தினேஷ்பாபு.

Related Posts